எரிபொருள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நபர் கைது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கமொன்றின் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் தொழிற்சங்கங்களில் ஒன்றான ஜாதிக சேவக சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவினரால் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து விசாரணை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என வெளியிடப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.




