எரிபொருள் இறக்குமதியை குறைக்க முயற்சிக்கும் அரசாங்கம்
இந்தாண்டு முதல், இலங்கைக்கு இறக்குமதி செய்யும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை முடிந்த வரையில் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.
இலங்கையிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு பரல் மசகு எண்ணெய் 59 டொலர் விலையின் அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
அதேவேளை கடனுதவியின் அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
நாட்டின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின், பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவும் தடைவிதித்தது.
இறக்குமதிகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த பிரதிபலன்கள் இன்னும் அரசாங்கத்திற்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri