பெட்ரோல் மோசடி முறைப்பாட்டை ஆராய்ந்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர்
திருகோணமலை(Trincomalee) லிங்க நகரில் இருக்கும் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பிரீமியம் பெட்ரோல் அதாவது 95 என்கின்ற பெட்ரோல் மட்டும் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைபாட்டின் அடிப்படையில் திருகோணமலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் அந்த இடத்துக்கு விஜயம் செய்துள்ளனர்.
குறித்த விஜயமானது நேற்றையதினம்(07) இடம்பெற்றுள்ளது.
பெட்ரோல் மோசடி
அங்கே ஆய்வு செய்ததில் தொடர்ந்தும் இவ்வாறான ஒரு நிலை காணப்பட்டது தெரியவந்ததுடன் சாதாரண பெட்ரோல் அங்கு காணப்படவில்லை.
குறித்த நிலையத்தின் முகாமையாளர் பெட்ரோல் கைவசம் முடிந்து விட்டு என்றும் அதை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பதினோராம் மாதம் முதல் கிடைக்கப்பெற்ற அதிக முறைப்பாடுகளின் அடிப்படையில் தாங்கள் வந்து சோதனை செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் முடிவில் பெட்ரோல் இல்லை என்றால் அதற்கான அறிவுறுத்தல் பலகை வைக்க வேண்டும் என்றும் பெட்ரோல் விற்பனையை திணிக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி குற்றம்
இது சம்பந்தமான தீர்வினை மாலை 3 மணிக்குள் நிறைவேற்றுவதாக நிலைய முகாமையாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் அங்கு ஒரு பெட்ரோல் எரிபொருள் நிரப்பும் ஸ்தானம் மூடி கிடந்ததை அவதானிக்க முடிந்தது அதனை அவர்களிடம் வினாவிய போது அதற்கு அந்த டேங்க்குள் பெட்ரோலும் டீசலும் கலந்துவிட்ட படியால் அந்தத் தாங்கி பத்து மாதங்களாக மூடப்பட்டு கிடப்பதாகவும் அது இன்னும் சீர் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோலும் டீசலும் இவ்வாறு கலந்து வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று எச்சரித்த அதிகாரிகள் அதற்கான தீர்வை இன்று மாலைக்குள் செய்து முடிக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மீண்டும் நாளை வந்து சோதனை செய்வதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |