எரிபொருள் கிடைக்கும் இடங்களை அறிய இணையத்தளம்
எரிபொருள் கையிருப்பில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இலகுவாக அடையாளம் காண இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ICTA ஆகியன இணைந்து இந்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளன.
எரிபொருளை பெற்றுக்கொள்ளும் இயலுமை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை தினமும் காலை 9 மணிக்கு இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் இணையத்தளம்

மேலும் குறித்த இணையத்தளம் காலை 9 மணிக்கு புதுப்பிக்கப்படும் என்பதுடன் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெட்ரோல் உட்பட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் எரிபொருளை கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். இதனை கவனத்தில் கொண்டு இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan