இலங்கைக்கு வந்துச் சென்ற ரஷ்ய பிரதிநிதிகள்
ரஷ்யாவில் இருந்து எரிபொருளை வழங்குவது தொடர்பில் அந்நாட்டின் இரண்டு அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து கலந்துரையாடி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய நிறுவனம் இலங்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தயாரித்து கைச்சாத்திட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கு இலங்கை தரப்பு சம்மதிக்கும் பட்சத்தில் மாதாந்தம் 300 மில்லியன் டொலர் பெறுமதியான கச்சா எண்ணெயை கடனாக வழங்க நிறுவனம் தயாராக இருப்பதாகவும் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படும்
கடன் நிவாரண காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு இந்த எரிபொருளுக்கான பணத்தை செலுத்த வேண்டும் எனவும், உலக சந்தையில் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் உறுப்பினர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நிறுவனத்தின் சட்டபூர்வமான தன்மையைப் பொருட்படுத்தாமல் உரிய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது என எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் சட்ட திணைக்கள அதிகாரிகள் ரஷ்ய பிரேரணைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam