எரிபொருள் கொள்கலன் வாகனம் குடைசாய்ந்தததில் ஒருவர் படுகாயம்
திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காகச் சென்ற கொள்கலன் வாகனமொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன்
வாகனமொன்றே இவ்வாறு குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் வாகனம் கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.











ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
