எரிபொருள் பௌசருடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி.. படுகாயமடைந்த குழந்தை
எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசரும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறு குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிறு குழந்தை ஒன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவையில் எரிபொருள் விநியோக நிலையத்திலிருந்து கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பெளசர் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவிப்பு..
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் நேற்று (05) மாலை 5:00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

செனன் தோட்டத்தில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியினை அதே திசையில் பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பெளசர் முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, பெளசரின் பின்புற உலோகப் பகுதி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பெளசரில் இருந்து எரிபொருளை இறக்கிய பின்னர் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri