மத்திய கிழக்கில் தொடர் மோதல்! எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வினால் இலங்கைக்கு சிக்கல்
புவிசார் பதற்ற சூழ்நிலையில், அமெரிக்க-ஈரான் இராணுவ மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் உலகப் பொருளாதாரம் கடுமையான சரிவைச்சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
உலகப்பொருளாதார வளர்ச்சி
இந்த பின்னணியில் போர்ச்சூழல் ஏப்ரல் இறுதி வரை தொடர்ந்தால், உலகப் பொருளாதார வளர்ச்சி கணிசமாகக் குறையும் என்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) எச்சரிக்கின்றது.

எரிசக்தி நெருக்கடியானது, எரிபொருள் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் மீது கடுமையான பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை தனது பெரும்பாலான எரிசக்தி தேவைகளை இறக்குமதி செய்வதால், உலக விலை உயர்வால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 120 டொலரைத் தாண்டியதால், நாட்டில் எரிபொருள் விலைகளும் பலமுறை கணிசமாக அதிகரித்துள்ளன.
எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி
அதன்படி, போக்குவரத்துச் செலவுகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. இலங்கைக்கு எரிவாயு வழங்கும் முக்கிய வழித்தடங்கள் மத்திய கிழக்கு வழியாகச் செல்வதால், எரிவாயு பற்றாக்குறை மற்றும் விலை, போக்குவரத்துச் செலவு சுமார் இரு மடங்கு அதிகரிப்பதற்கான சாத்தியம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் எரிவாயு விலைகளும் இரண்டு முறை அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் இறக்குமதிக்காக அதிக டொலர்களைச் செலவிட வேண்டியிருப்பது, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான செலவு, கடந்த சில வாரங்களில் சுமார் 35% அதிகரித்துள்ளது.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவுறுத்தல்
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri