முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் இருந்து குண்டர்களை அப்புறப்படுத்த உத்தரவு
கொழும்பு அருகே முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகமொன்றை பலாத்காரமாக கைப்பற்றிக்கொண்டிருந்த குண்டர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு - கண்டி வீதியில் அமைந்துள்ள யக்கலையில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகம் அண்மையில் குண்டர்களால் அடாவடியாக கைப்பற்றப்பட்டிருந்தது.
அலுவலகத்தில் கடமையாற்றிய மூதாட்டியொருவர் உள்ளிட்ட ஆறுபேர் தாக்குதல்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சட்டபூர்வ உரித்தாளி
சம்பவம் தொடர்பில் நேற்றையதினம்(09) கம்பஹா மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்தில் தங்கியுள்ள குண்டர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அலுவலகத்தின் சட்டபூர்வ உரித்தாளி நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் வரை குறித்த அலுவலகத்தை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam