பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - புதியதொரு வரலாறு பதியப்பட்டுள்ளது
தமிழினத்திற்கான நீதிகோரிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் இன்று இரவு நிறைவடைந்த நிலையில் அதனை நினைவுப்படுத்தும் முகமாக நினைவுக்கல் அமைக்கப்பட்டு திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு தினங்களாக பல்வேறு தடைகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணி இன்றையதினம் பொலிகண்டியில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு புதிய வரலாறு ஒன்றை பதியப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கடந்த 3ஆம் திகதி அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பமான குறித்த பேரணி, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் என பலர் ஏற்படுத்திய தடைகளை சந்தித்து இன்று தனது இலக்கை அடைந்துள்ளது.
குறித்த பேரணிக்கு, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் சமூகமும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தங்களது ஆதரவை நல்கி இருந்ததுடன், உணர்வெழுச்சியுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.









