பிணையில் அனுமதிக்கப்பட்ட கெஹெலிய தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மேல் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12.09.2024) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட மூவர், கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (11) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்படும் போது அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல்ல, பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
மேலும், மார்ச் மாதம் 14ஆம் திகதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் நால்வருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டதுடன், அவர்களை விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri