இந்தியப் பெருங்கடல் ஆணைய பார்வையாளராக இணைய இலங்கைக்கு அழைப்பு
இந்தியப் பெருங்கடலின் ஐந்து ஆபிரிக்க உறுப்பு நாடுகளை இணைக்கும் அரசுகளுக்கிடையேயான அமைப்பான, பிரான்ஸ் ஆரம்பித்துள்ள இந்தியப் பெருங்கடல் ஆணையத்தில் ஒரு பார்வையாளராக இணைவதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இலங்கைக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் இடையில் நேற்று (29.07.2023) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்கள் பெரும்பாலும் இந்தியப் பெருங்கடலில் உள்ள புவிசார் அரசியல் மற்றும் காலநிலையை மையமாகக் கொண்டிருந்தன.
இந்தியப் பெருங்கடல் ஆணையம்
பிரான்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய சவாலுக்கு நிதியளிப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் 2015 நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு இடையூறு விளைவிக்காமல் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகவும் இரண்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
1982 இல் அமைக்கப்பட்ட இந்தியப் பெருங்கடல் ஆணையம் இதுவரை ஏழு பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸின் சர்வதேச அமைப்பு, இந்தியா, ஜப்பான், மோல்டா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன அந்த ஏழு பார்வையாளர்களாகும்.
இந்தநிலையில் இலங்கை எட்டாவது பார்வையாளராக அழைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு பெரிஸ் கிளப் செயலகம் மூலம் தனது அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவரகத்தின் அலுவலகமும் இலங்கையில் திறக்கப்படவுள்ளதாக இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
