தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகி வரும் சுதந்திரக் கட்சி
நாட்டில் துறைமுக நகரம் சம்பந்தமாக தற்போது வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது தொடர்பாக இதுவரை கலந்துரையாடவில்லை எனவும் இனிவரும் நாட்களில் இந்த விடயம் பற்றி கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகருக்குள் தனியான பொலிஸ் பிரிவு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தனியான இராணுவம் உருவாகும், தனியான சட்டம் உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
இப்படியான நிலைமை ஏற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது. ஜனாதிபதி அப்படியான நிலைமைக்கு செல்வார் என நாங்கள் நினைக்கவில்லை.
நாட்டை முன்னேற்றுவதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேவையாக உள்ளது. இதனை மீறி நாட்டுக்குள் நிர்வாகத்தை முன்னெடுக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் நம்பவில்லை எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொழும்பு துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த கட்சி தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
