பிரித்தானியாவின் Freedom of London விருதை வென்ற இலங்கையர்
பிரித்தானியாவின் Freedom of London விருதை இலங்கையரொருவர் வென்றுள்ளார்.
பிரித்தானியாவின் East Sussex பிராந்தியத்தின் Hastings நகர கவுன்சிலரான லூசியன் பெர்னாண்டோ என்பவரே Freedom of London விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, லண்டன் மாநகர மேயரின் பிரதிநிதி Freedom of London எனும் விருதை கவுன்சிலர் லூசியன் பெர்னாண்டோவிற்கு வழங்கியுள்ளார்.
விருதின் நோக்கம்
லண்டன் நகர் மீதான அக்கறை, அர்ப்பணிப்பு சேவையாற்றுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு Court of Common Council உறுப்பினர்கள் வாக்களித்து Freedom of London விருதை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் Hastings நகர கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டிருந்த 33 வயதான லூசியன் பெர்னாண்டோ இந்த விருதினை வென்றுள்ளார்.
கொழும்பு - கொட்டாஞ்சேனையை சேர்ந்த இவர், கொழும்பு புனித ஆசிர்வாதப்பர் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.