40 நாடுகளில் இருந்து இலங்கை செல்வோருக்கு முக்கிய தகவல்!
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச வீசா வசதி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போது, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மேம்படுத்தும் நோக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா விசா
இந்த விசா நடைமுறை ஆறு மாதங்களின் பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் தொடர்வதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

தகுதியுள்ள 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 30 நாட்கள் தங்கியிருக்கக்கூடிய சுற்றுலா விசாக்கள் எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam