மாணவர்களுக்கு இன்று முதல் கிடைக்கவுள்ள நன்மை
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடரும் வகையில் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
2019, 2020, 2021ஆம் ஆண்டுகளில் உயர்தரக் கல்வியை முடித்தவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடரும் வகையில் 5,000 பேருக்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வட்டி இல்லா கடன்
இந்த கடனை பெறுவதற்கு இன்று(04.07.2023) முதல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய கடன் தொகையை பெறும் மாணவர்கள் தொழிலை அடிப்படையாகக் கொண்ட பாடநெறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதிகபட்சமாக 08 இலட்சம் வரை கடனாக வழங்கப்படுவதுடன் அதற்கான வட்டியை அரசே ஏற்க தீர்மானித்துள்ளது.
மேலதிக தகவல்
இதேவேளை http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க முடியும்
மேலதிக தகவல்களை 070-3555970/79 என்ற எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்காக
போட்டித் தன்மை ஏற்பட்டால் மாணவர்களின் வெட்டுப் புள்ளிக்கு அமைய வட்டி இல்லா கடன்
வழங்கப்படும்.
வெளிப்படை தன்மையுடன் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |