மாற்றுத்திறனாளிகள் இலவசமாக மெட்ரோ பேருந்தில் பயணம் செய்ய வாய்ப்பு!
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மெட்ரோ பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(27.11.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச அனுசரிப்பைக் குறிக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து சேவைகளை வழங்குமாறு லங்கா மெட்ரோ டிரான்சிட் லிமிடெட் நிறுவனத்திடம் முன்னதாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இலவசப் பயணம்
கோரிக்கையை அங்கீகரிப்பது தொடர்பான முடிவை லங்கா மெட்ரோ டிரான்சிட் தலைவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததாக அவர் பாராளுமன்றத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.

அதன்படி, மாற்றுத்திறனாளிகள் டிசம்பர் 3 முதல் மெட்ரோ பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 23 மணி நேரம் முன்
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan