ஜனாதிபதி உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பளிப்பார்! முன்னாள் சபாநாயகரிடம் நெகிழ்ந்து பேசிய ‘பிரீ லோயர்ஸ்’ அமைப்பு....
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்குமாறு பிரீ லோயர்ஸ் (Free Lawyers) அமைப்பு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளது.
கெஸ்பேவ பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட இளம் தம்பதியினர்!பெண்ணில் உடலில் போடப்பட்ட கரப்பான் பூச்சி..
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
‘பிரீ லாயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு உட்பட சுதந்திர இயக்க மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று கரு ஜயசூரியவை சந்தித்த போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கரு ஜயசூரியவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட மேலதிக தகவல்கள்.. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார் என்பதை நாம் அறிவோம்.
உங்களால் ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியும். அவர் இதில் ஓரடி பின்வாங்குவதால் அவருக்கு எந்த அவமானமும் ஏற்படப்போவதில்லை.
ஜனாதிபதிக்கும் தவறுகள் நேரலாம். எனவே, அவர் ஓரடி பின்வாங்குவது ஒரு பிரச்சினையாகாது. எமக்கு இப்போது இந்த நடவடிக்கைகளைப் பற்றி பேச வேண்டியுள்ள ஒரே இடம் நீதிமன்றமே ஆகும்.

எனவே, இப்போது நீதிமன்றத்தையும் முழுமையாகத் தமக்குக் கீழ் கொண்டுவரவா இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.
கரு ஜயசூரிய தெரிவித்த கருத்து... ஆரம்பத்திலிருந்தே நாமும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வேண்டாம் என்றே கூறினோம்.
சட்டத்தரணிகள் சங்கமும் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனமாகும். நாமும் அதற்காகவே ஆதரவு தெரிவித்தோம்.எனவே, இங்கு அதுவே அவசியமாகிறது. இதனால், இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என நாம் நம்புகிறோம் என குறிப்பிட்டார்.