யாழில் கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு
யாழில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் தென்மராட்சி கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இன்று (10.10.2023) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உதவித்திட்டம்
சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணையை வழங்கினார்.
மேலும் நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கடற்றொழிலாளர்களுக்கு தலா 78 லீற்றர் என்ற அடிப்படையில் உதவித்திட்டம்
வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
