சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை வர அனுமதி: வெளிவிவகார அமைச்சர் தகவல்
சீன ஆய்வுக் கப்பலான ஷ யான் 6க்கு இலங்கையில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அக்டோபரில் சீனக் கப்பல் துறைமுக அழைப்பை நாடிய போதிலும், நவம்பரில் சீனக் கப்பலை நங்கூரமிடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது வெறும் விஜயம் அல்ல என்று குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், கப்பல் நாட்டில் நங்கூரமிடும் போது தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் கொடூர தாக்குதல் : நிராகரிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
இந்தியாவின் பாதுகாப்பு கவலை
இலங்கையின் உள் விவகாரங்களைக் கருத்தில் கொண்டே கப்பலை நங்கூரமிடுவதற்கு சீனாவுக்கு திகதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனாவுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் குறித்த கப்பல் தொடர்பில் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள், சட்டபூர்வமானவை என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கை வரும் சீனக் கப்பலான ஷ யான் 6, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |