பொசன் தினத்தில் இலவச கண் சத்திர சிகிச்சை
பொசன் போயா தினத்தை முன்னிட்டு சுமார் 300 பேருக்கு கண் தொடர்பான சத்திரசிகிச்சை வழங்கும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன்படி, கண் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் கசுன் குணவர்தனவின் யோசனையின் அடிப்படையில், கண் பிரச்சினைகள் உள்ள 300 பேருக்கு இன்று (10) காலை 5 மணி முதல் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஒரு சத்திரைசிகிச்சை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதன்போது ஒரே ஒரு சிறப்பு வைத்தியர் மாத்திரம் கண்புரை அகற்றுதல் மற்றும் உள்விழி உயிரியல் வில்லை(Lens fitting) பொருத்துதல் உள்ளிட்ட ஏராளமான கண் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.
பரிசோதனைகள்
குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின், துணை இயக்குநர் வைத்தியர் மதுஷா சத்குமார கூறுகையில்,
அறுவை சிகிச்சை அறையில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் தாதிய ஊழியர்களும் மற்றும், வைத்தியசாலையில் உள்ள மருத்துவ, தாதிய மற்றும் ஊழியர்களும், அதிகாரிகளுடன் இணைந்து பல நாட்கள் கடுமையாக உழைத்து இந்த தொண்டு செயலை மேற்கொண்டனர்.
ஆரம்பத்தில் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு, தொடர்புடைய பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், 250 முதல் 350 பேர் வரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
