இலங்கையில் மக்களுக்கு ஒரேயொரு நாள் கிடைக்கப் போகும் வாய்ப்பு
இலங்கையில் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படப் போகும் இலவச வாய்ப்பு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்களுக்குள் இலவசமாக நுழைவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 2023 பெப்ரவரி 4ஆம் திகதியன்று இந்த வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கவுள்ளது.
வழங்கப்பட்டுள்ள ஒப்புதல்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இதற்கான ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டது.
