திருகோணமலையில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்
திருகோணமலையில் இலவச ஆய்வேத வைத்திய முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முகாமானது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, ஏற்பாட்டில் நாளை (14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் மதவாச்சி மகா வித்தியாலயத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4. 00 மணி வரையும நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கிளை நிறுவனங்களான மாகாண சுகாதாரத் திணைக்களம், சுதேச வைத்திய திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை திணைக்களம் ஆகியன இணைந்து இந்த வைத்திய முகாமை முன்னெடுக்கவுள்ளன.
வைத்திய சேவை
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர , கிழக்கு மாகாண பிரதம செயலாளர் N . தலங்கமே, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் E. H. M. W. G. திசாநாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இந்த வைத்திய முகாமில் கலந்து கொண்டு, பயன்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, பொதுமக்களுக்காக பிரயாண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சகல நோய்களுக்குமான சிகிச்சை, வைத்திய பரிசோதனை, இரத்த பரிசோதனை உட்பட அனைத்து சிகிச்சைகளும் இங்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
பொதுமக்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் இந்த வைத்திய முகாமில் பங்கேற்கவுள்ளனர்.
இங்கு நோய்களுக்காக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதோடு, கை கால் மூட்டு வலிகள், முறிவுகள் போன்றவற்றுக்கு அதே நாளில் மசாஜ் சிகிச்சை முறையும் வழங்கப்படவுள்ளது.
நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள்
மேலும் நோயாளிகளுக்கு, ஆரோக்கிய கஞ்சி மற்றும் பிஸ்கட் ஆகியவைகளும் இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சக்கர நாற்காலி போன்றவைகளையும் வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அத்தோடு, சிறுவர்கள் தொடர்பான விழிப்புணர்வு மேம்பாட்டு நடவடிக்கைகளும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது, பயன்படுத்திக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வைத்திய முகாமை, சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான பௌதிக ஆளணி வசதிகளை கோமரங்கடவெல பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
