நாட்டில் இலட்சக்கணக்கானோர் கைது!
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (29) வரை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி குறித்த காலப்பகுதியினுள் 928,787 கிலோகிராம் ஹெரோயின், 1,396,709 கிலோகிராம் ஐஸ், 11,192,823 கிலோகிராம் கஞ்சா, 27,836 கிலோகிராம் கொக்கேய்ன் மற்றும் 381,428 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம், இலங்கை பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து நாடு முழுவதும் பல விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கைது
இந்த நடவடிக்கைகளில் இலங்கை பொலிஸ்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளைச் சேர்ந்த 6,695 பேர் பங்கேற்றனர்.
அதன்போது, 25,111 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 10,128 வாகனங்கள் மற்றும் 7,734 மோட்டார் சைக்கிள்களும் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 948 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 13 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நடவடிக்கையின் போது 3 சட்டவிரோத துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



