கனடாவில் பல பெண்களை ஏமாற்றிய மோசடி பெண்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கனடாவில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்த பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றினை விடுத்துள்ளனர்.
கனடாவில் தன்னை ஆண் போல காட்டி இணையதளம் ஊடாக பல பெண்களை ஏமாற்றி மில்லியன் கணக்கான பணத்தினை பெற்று பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த Aleth Duell என்ற 69 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்லைன் மூலம் பல பெண்களிடம் நட்பாக பழகி ஏமாற்றி பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்.
குறித்த பெண்ணால் பாதிக்கப்பட்ட பலர் பிரிட்டீஷ் கொலம்பியா, ஒன்றாறோ பகுதியில் அதிகளவு இருக்கலாம் எனவும் ,இது தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாரிடம் தெரிவிக்கும் படியும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
