கிளிநொச்சியில் முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி மோசடி
கிளிநொச்சி - குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
சில தனியார் நெற் கொள்வனவுகளில் மோசடிகள் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
குமரபுரம் பகுதி
இந்நிலையில் நேற்று தினம்(19-01-2025) கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் தனியார் வர்த்தகர்களால் நெல் கொள்ளளவு செய்த சமயம் முத்திரையிடப்படாத தராசினை பயன்படுத்தி நெல்லின் எடைகளை குறைத்து கொள்வனவு செய்ததை அவதானித்த விவசாயி குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதை எடுத்து பொதுமக்களால் குறித்த தனியார் வர்த்தகர் தடுத்து நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் முற்று முழுதாக மீள பெறப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான எடைகளின் படி பனம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நெல் கொள்ளளவு செய்யும் தரகர்கள் ஊடாகவும் நெல் கொள்ளளவு செய்கின்ற தனியார் ஊடாகவும் பெருமளவான மோசடிகள் விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri