பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி பண மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை
பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அண்மைக் காலங்களில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான போலிச் சமூக ஊடகக் கணக்குகளுக்குத் தமது தனிப்பட்ட ரீதியிலான அல்லது உணர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புவதைத் தவிர்க்குமாறு நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பண மோசடி
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாத நபர்களுடன் தொடர்புகளை பேணுவதில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri