தொலைபேசி ஊடாக மோசடி செய்த நபர் கைது
தொலைபேசி ஊடாக மோசடி செய்து வந்த நபர் ஒருவரை மாதம்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போலியாக தாம் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவோரின் நண்பர்களது நண்பன் என்ற ரீதியில் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
31 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தாம் குறித்த நண்பர் அல்லது உறவினரின் நெருங்கிய நண்பர் என போலியாக கூறி பணம் மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர் ஒருவர் ஒரு லட்சம் ரூபா இவ்வாறு பணம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இவ்வாறு குறித்த நபர் மோசடியாக பணம் பெற்றுக்கொண்டுள்ளார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
