வெளிநாட்டிலிருந்த இலங்கை பெண்ணிடம் திருமணம் செய்வதாக பெருந்தொகை பணமோசடி
அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் இலங்கை பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து (1,173,400) ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்தெனிய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விமானப்படை அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியின் தாயார் முறைப்பாடு
கண்டியை சேர்ந்த யுவதியின் தாயார் டிசம்பர் 29 திகதி அளித்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணையை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகநபரின் கணக்கு விவரங்களை சரிபார்த்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி அம்பாறை விமானப்படைத் தளத்தில் பணியாற்றுபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் யுவதியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த பின்னர், அவரை திருமணம் செய்யாமல் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரீரப் பிணைகளில் விடுவிப்பு
இதனையடுத்து கைது செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி கடந்த 13 ஆம் திகதி தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தலா ரூ. 500,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.