நெல் விற்பனையில் மோசடி! - சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்
"கடந்த அரசில் 88 ஆயிரத்து 615 மெட்ரிக் தொன் நெல் விலங்கு உணவாக குறைந்த விலையில் விற்கப்பட்டதால் 2.48 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன."
இவ்வாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது அரச தரப்பு எம்.பி. கே.பி. குமாரசிறி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "கடந்த அரசில் நல்ல நிலையில் இருந்த நெல் விலங்குகளின் தீவனமாகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நெல் ஒரு கிலோவுக்கு 24 ரூபா குறைத்தே விற்கப்பட்டது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஒப்புதல் இல்லாமல் 88 ஆயிரத்து 615 மெட்ரிக் தொன் நெல் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டதால் 2.48 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.
இதற்கு அப்போதைய அமைச்சர் உள்ளிட்ட அரசுதான் பொறுப்பு. இது தொடர்பாக
சி.ஐ.டியும் விசாரித்து வருகின்றது" - என்றார்.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan