பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் பண மோசடி: சந்தேகநபர் கைது
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் ஒரு லட்சம் மோசடி செய்த சக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் அநுராதபுரம் பதவிய பொலிஸில் பணிபுரியும் திருமணமானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியே ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் உறுதிமொழி
2019 ஆம் ஆண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை சந்தேகநபர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டு பெண் உத்தியோகத்தரை ஏமாற்றியதாக வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரமே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |