ஈரானில் தீவிரமடைந்துள்ள கலவரம் - பிரான்ஸ் மக்களுக்கு அவசர அறிவிப்பு
ஈரானில் உள்நாட்டு கலவரம் அதிகரித்துள்ளதை அடுத்து, அங்குள்ள பிரான்ஸ் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
ஈரானில் வசிக்கும் பிரான்ஸ் சுற்றுல்லாப்பயணிகள், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் அனைவரும் முடிந்தவரை வேகமாக அங்கிருந்து வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டவர்கள் கைது
கைது செய்யப்படும் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் அண்மையில் இரு பிரான்ஸவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஈரானை உளவு பார்ப்பதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேவேளை, நேற்றும் பிரான்ஸ் தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத, நியாயமற்ற நடவடிக்கை என தெரிவித்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் பிரான்ஸ் மக்களை அங்கிருந்து வெளியேறும் படி அறிவுத்தியுள்ளது.
ஈரானில் கடந்த செப்டம்பர் 16ம் திகதியில் இருந்து பெரும் உள்நாட்டு கலவரம் வெடித்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை குறைந்தது 92 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.