அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ்
முதன்முறையாக, பிரான்ஸ் நாடு, அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.
சமீபத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனை மேற்கொண்ட விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் மேற்கொண்டுள்ள ஒரு சோதனை பரவலாக பேசப்படுகிறது.
ரஃபேல் ஜெட் விமானம் ஒன்று அந்த ஏவுகணையை ஏவியதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Sebastien Lecornu தெரிவித்துள்ளார்.
ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பிரான்சும் இந்த சோதனையை நடத்தியுள்ளதால், அது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையா என கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால், உக்ரைனுக்கு போர் வீரர்களை அனுப்புவதற்கு ஆதரவாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கருத்துத் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ரஷ்யா தான் அணு ஆயுத சோதனை நடத்துவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |