பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு 3 வருட சிறைத்தண்டனை: உறுதிசெய்தது நீதிமன்றம்
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் (Nicolas Sarkozy) 3 வருடச் சிறைத் தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் வழக்கு இன்றைய தினம் (17.05.2023) நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்டபோதே இத் தண்டனை உறுதியாகியுள்ளது.
கடந்த 2007 முதல் 2012ஆம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் நிக்கலஸ் சார்கோஸி.
ஊழல் வழக்கு ஒன்றில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 3 வருடச் சிறைத்தண்டனை விதித்து 2001 மார்ச் மாதம் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

ஊழல் ஒப்பந்தம்
எனினும், அவற்றில் 2 வருடச் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன், எஞ்சிய ஒரு வருட காலத்தைச் சிறையில் கழிக்காமல் அவர், இலத்திரனியல் கண்காணிப்புப் பட்டியை அணிந்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
நீதித்துறை விசாரணைகள் தொடர்பாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காகத் தனது முன்னாள் சட்டத்தரணி தியறி ஹேர்ஸோக்குடன் இணைந்து நீதிபதி கில்பர்ட் அஸிபேர்ட்டுடன் ஊழல் ஒப்பந்தமொன்றை நிக்கலஸ் சார்கோஸி செய்து கொண்டிருந்தார் என அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
இதற்காக ரகசிய தொலைபேசி இணைப்பு ஒன்றை பயன்படுத்தியதாகவும் சார்கோஸி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலேயே 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு 3 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தண்டனைக்கு எதிராக நிக்கலஸ் சார்கோஸி மேன்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அவருக்கான தண்டனையை உறுதிப்படுத்தி பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri