பிரான்ஸில் குடிநீரால் ஏற்பட்டுள்ள ஆபத்து: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்ஸில் தண்ணீரை சுத்தம் செய்யும் இரசாயனம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸின் வடமேற்கு பகுதியான பிரிட்டனியில் அதிகளான மக்கள் இந்த நீரை பருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 12 மில்லியன் பேர் ஆபத்தான நீரை பருகியுள்ளதாகவும் இதனால் ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் தொகை மக்கள் தொகையில் 43 சதவீதம் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரசாயனம் பயன்படுத்துவதற்கான சட்டம்
2007 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சட்டத்திற்கு அமைய இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனினும் தற்போது அந்த எல்லையை தாண்டி இரசாயனம் பயன்டுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இதற்கமைய, குடிநீரை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் இரசாயனம் லீட்டருக்கு 0.1 மைக்ரோகிராம் அல்லது சில பகுதிகளுக்கு 0.3 மைக்ரோகிராம் என்ற வரம்பைத் தாண்டக்கூடாது. மேலும் மொத்தம் லீட்டருக்கு 0.5 மைக்ரோ கிராம்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும்.
நீர் சுத்திகரிப்பு நிபுணரின் கருத்து
இந்நிலையில் நீர் பகுப்பாய்வு முறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக மாண்ட்பெல்லியர் (Montpellier)பல்கலைக்கழகத்தின் நீர் சுத்திகரிப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாம் எவ்வளவு அதிகமாக ஆய்வுகளை மேற்கொள்கின்றோமோ அதற்கமைய தண்ணீரில் பூச்சிக்கொல்லிகள் கண்டுபிடிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கண்டுபிடித்து வருகிறோம். பிரான்ஸில் குடிநீர் இரண்டு வெவ்வேறு சோதனைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
முதலாவது பிராந்திய சுகாதார அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படுகின்றது. இது ஆராய்ச்சிக்கான மூலக்கூறுகளின் பட்டியலைத் தீர்மானிக்கிறது.
பிரான்ஸில் குழாய் நீர் இன்னும் குடிக்க பாதுகாப்பானதாகவே உள்ளதாகவும், நீர் வாழ்க்கையின் அடிப்படையான விடயம். அதில் பூச்சிக்கொல்லிகளைக் கண்டுபிடிப்பது சாதாரணமானது அல்ல.
எனினும் பாதிக்கப்பட்ட நீரை பருகிய மக்களுக்கு நீண்டகால ஆபத்துக்கள் உள்ளதா என ஆராயப்பட்டு வருகின்றது.”என கூறியுள்ளார்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
