பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் படுகொலை- அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

By Independent Writer Aug 11, 2021 06:14 PM GMT
Report

கொரோனா பெருந்தொற்றின் பின்னணியில் பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் குருரமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

பரிஸ் புறநகர பகுதியான வால்துஓஸ் பிராந்தியத்தில் 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

பரிசின் முன்னணி ஊடங்களில் தலைப்பில் செய்தியாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் புலம்பெயர் இலங்கை குடும்பங்களில் இடம் பெற்ற இன்னொரு குருர கொலையாக பதிவாகியுள்ளது.

பரிசில் இருந்து வடமேற்கே சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வால்துஓஸ் பிராந்தியத்தின் செந்துவான் லமேன் (Saint-Ouen-l’Aumône)   பகுதியில் இந்த இரட்டைக்கொலை இடம்பெற்றுள்ளது.

இரவுநேர பணிமுடித்து காலை 10 மணியளவில் வீடுதிரும்பிய இலங்கை பூர்வீகத்தை கொண்ட குடும்பத்லைவர் தனது 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் அவர்களது படுக்கை அறையில் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டகாயங்களுடன் உடலங்களாக கண்டதையடுத்து இந்த குருரசம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

உடனடியான காவற்துறையினர் உட்பட்ட அவசரகால பணியாளர்கள் அழைப்பட்டு அந்தப்பகுதி காவற்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. காவற்துறையின் தடயவியல் பிரிவு நடத்திய தேடுதல்களில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு கூரிய ஒரு கத்தி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்த குருர சம்பவத்திலும் கொலையாளி இந்த குடும்பத்திற்குள் இருப்பதற்கான சாத்தியங்களை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகள் குறிப்பிடுகின்றன.

ஆயினும் இந்த கட்டத்தில் இதுகுறித்த திடமான அனுமானங்களை வெளியிடுவதற்கு காவற்துறை விரும்பவில்லை.

குறித்த வீட்டில் இருந்து இரண்டு கொல்லப்பட்டவரின் இரண்டு மகன்கள் காவற்துறை பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்னர். அவர்களில் ஒருவர்; ஆடைகளில் இரத்தம் தோய்ந்த நிலையில் இருந்தாகவும் இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் இருக்காத மற்ற மகன் கடும் அதிர்ச்சியிலும் இருந்தாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் இன்று காலைவரை அறிவிக்கப்பட்வில்லை துன்பியலுக்கு உள்ளான இந்த குடும்பம் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் சமுகநல உதவிகளை வழங்கும் எம்மாஸ் அமைப்பின் வதிவிடங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தில் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.

தற்போது வெர்செயில் பிராந்திய நீதித்துறை இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டதையடுத்து வேண்டுமென்றே செய்யப்படும் படுகொலைக்குரிய வகைப்படுத்தல் பிரிவின் கீழ் பொந்துவாஸ் அரசு வழக்குதொடுனர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

இந்த குருர கொலைகளுக்குரிய துல்லியமான காரணங்கள் இனிமேல்தான் தெரியவரும் என்றபோதிலும் இந்த சம்பவம் பிரான்ஸ்வாழ் இலங்கையர்களையும் புலம்பெயர் இலங்கை மக்களையும் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  


GalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US