பிரான்ஸில் தொடரும் போராட்டம்: பரபரப்பை ஏற்படுத்திய முகமூடி கூட்ட தாக்குதல்
பிரான்ஸில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக, பரபரப்பை ஏற்படுத்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை, பிரான்சிலுள்ள Nanterre என்னுமிடத்தில், போக்குவரத்து விதிகளை மீறியதாக, Nahel (17) என்னும் இளைஞரே இவ்வாறு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பிரான்ஸில் தற்போது உருவாகியுள்ள வன்முறைக்கு வழிவகுத்துள்ளது, உயிரிழந்த இளைஞருக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கிய போராட்டக்காரர்கள் கடைகளை சேதப்படுத்துவது, தீவைப்பு போன்ற செயல்களில் இறங்க, பல்லாயிரக்கணக்கான பொலிஸார் நாடெங்கும் குவிக்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். என்றாலும் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இன்று வரை தொடர்கின்றன.
இராணுவம் மீதான குற்றச்சாட்டு
வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயன்றுகொண்டிருக்கும்போது, மர்ம நபர்கள் சிலர் அவர்களுக்கு உதவியதாக வெளியாகிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, Lorient என்னும் நகரில், தொப்பியும் முகமூடியும் அணிந்த ஒரு கூட்டம் போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கியுள்ளது.
இதற்கமைய குறித்த முகமூடி கூட்டம் இராணுவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், Lorient நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்போது இந்த இராணுவ தளத்திலுள்ள வீரர்கள் சிலர், முகத்தை மறைத்துக்கொண்டு போராட்டக்காரர்களை தாக்கியதாக பிரான்ஸ் நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இராணுவம் மீதான இந்தக் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக, கடற்படை அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
