இலங்கையில் பிரான்ஸ் படைத்தளம்: இரவோடு இரவாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்!(Video)
இந்து சமுத்திர கடற்பரப்பில் தமது இராணுவ பலத்தை நிலைநாட்ட இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆயுதமின்றிய மோதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்தோ - பசுபிக்கில் கடற்சார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தமது பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகின்றன.
குறித்த வல்லரசுகள் எதிரி நாடுகளின் செயற்பாட்டுக்கான நோட்டமிடலையும் எதிர் தரப்பின் செயற்பாட்டுக்கு ஏற்ற நகர்வுகளை மேற்கொள்ளவும் தமது ஆதிக்கங்களை இலங்கை மீது இராஜதந்திர முறையில் நிலைநிறுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது பிரான்ஸும் இலங்கையில் தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆரம்ப திட்டத்தின் ஒரு அங்கத்தை இரவோடு இரவாக கைச்சாத்திட்டுள்ளது.
இமானுவேல் மெக்ரேனின் இலங்கை வருகையில் இந்த விடயம் உறுதியானதோடு, கடல்சர் ஒத்துழைப்பு என்ற விடயமே இந்த வருகையில் முதன்மைப்படுத்தப்பட்டது.
அதிலும் முக்கியமாக பிரான்ஸ் அங்கம் வகிக்கும் ''இந்திய பெருங்கடல் சங்கம்'' ஊடக இலங்கையில் பொருளாதார ஒத்துழைப்பை நல்க உள்ளதாக பிரான்ஸ் தலைவர் இமானுவேல் மெக்ரேனின் இதன் போது அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான இலங்கை மற்றும் உலக அரசியல் நகர்வுகளை ஒரே பார்வையில் கொண்டு வருகிறது இன்றைய செய்திவீச்சு.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
