நைஜரிலிருந்து பிரான்ஸ் பிரஜைகள் வெளியேற்றம்
நைஜர் நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் போராட்டங்கள் வலுப்பெற்று வருவதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதன் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்ற தொடங்கியுள்ளது.
260 பேருக்கும் மேற்பட்ட பிரான்ஸ் குடிமக்களை ஏற்றிக் கொண்டு, அந்நாட்டின் தலைநகரமான நியாமியில் இருந்து முதல் விமானம் இன்று(02.08.2023)புறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களைக் கொண்ட அந்த விமானம், இன்று பாரிசில் தரையிறங்கியுள்ளது.
மக்களை காப்பாற்றும் முயற்சி
நைஜரின் வான்வெளி மூடப்பட்டதுள்ளதால், அந்நாட்டில் தமது மக்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
எஞ்சியிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், நியாமியிலுள்ள விமான நிலையத்திற்குச் செல்லும்படியும் பிரான்ஸ்அரசாங்கம் தமது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இத்தாலியும் அதன் குடிமக்களை நைஜர் நாட்டில் இருந்து வெளியேற்றி வருகிறது. 36 இத்தாலியர்களையும், 21 அமெரிக்கர்களையும், ஒரு பிரிட்டிஷ் நாட்டவரையும் ஏற்றிச் சென்ற விமானம் இன்று காலை ரோம் நகரைச் சென்றடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
