சுவிடனில் உதவி விஞ்ஞானியாக ஈழத்து சுவஸ்திகா
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவஸ்திகா இந்திரஜித் பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை பெற்றுள்ளார். பிரான்ஸில் உயரிய விருதினை பெற்ற இரண்டாவது தமிழ் பெண்ணாக இவர் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் சுகாதார சங்கம், பிரான்ஸ் இயற்பியல் சங்கம் என்பன சிமி பிசிக்ஸ் (Chimie Physique) என்ற அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான விருதினை வழங்கி வருகிறது.
இந்த நிலையிலேயே 2021ஆம் ஆண்டுக்கான விருதினை பாரிஸில் வசிக்கும் பாரி சக்லே (Paris Saclay) பல்கலைக்கழகப் பட்டதாரியான சுவஸ்திகா இந்திரஜித் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் காஇன் நொர்மன்டி (Caen Normandie) பல்கலைக்கழகத்தில் வேதியல் பிரிவில் முனைவர் ஆய்வு நடைபெற்றிருந்தது.
இதில் “அயன்களும் இலத்திரன்களும் மோதுவதால் ஏற்படும் கலங்களில் உருவாகும் நேரியல் ஐய்திரோகார்பன் கொத்துகளின் மூலக்கூறு வளர்ச்சி ” என்ற ஆய்வை சுவஸ்திகா மேற்கொண்டிருந்தார்.
அது சிறந்த விஞ்ஞான ஆய்வாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் விருது வழங்கும் நிகழ்வானது எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை சுவஸ்திகா, சுவீடன் நாட்டில் ஸ்டொக்ஹோம் (Stockholm) பல்கலைக்கழகத்தில் உதவி விஞ்ஞானியாக பணி புரிய ஆரம்பித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri