பிரான்ஸில் நடுவானில் மோதிக் கொண்ட போர் விமானங்கள்
பிரான்ஸ் விமானப்படையின் 2 ஜெட் ரக விமானங்கள் பயிற்சியின்போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தானது நேற்றைய தினம் பயிற்சியின் போது நடுவானில் வைத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு பிரான்ஸின் ஹாட்-மார்னேவில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே நேற்று பயிற்சியின்போது பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான ஆல்பா ஜெட் விமானங்கள் இவ்வாறு நடுவானில் மோதிக்கொண்டன.
Así fue como dos aviones #AlphaJet de la Patrulla Acrobática Francesa chocaron en el aire durante una sesión de entrenamiento en el este de #Francia. A bordo iban dos pilotos y un pasajero, quienes lograron eyectarse a tiempo. Los tres tuvieron heridas leves. pic.twitter.com/wWQF7QC8Lk
— Nacho Lozano (@nacholozano) March 26, 2025
விமான மோதல்
மோதலுக்கு முன்னர் இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.
அவர்கள் நலமுடன் இருப்பதாக பிரான்ஸ் விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்கு பின் விமானங்கள் இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
