மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்
மியன்மாரின் (Myanmar) இரண்டாவது பெரிய நகரமான நய்பிடாவில் (Naypyidaw) இன்று (30) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
Just now🚨#Myanmar time 1:39 pm M5.2 #earthquake hit Mandalay again on March 30, 2025.
— PyaeSone Loon (@LimMn2) March 30, 2025
Footage in Mandalay Pagoda. Sagaing & Mandalay need urgent help! #Myanmar#MyanmarEarthquake #WhatsHappeningInMyanmar pic.twitter.com/CaSHYMRiFY
இதுவரை, 1,600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 3,400 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
