கொழும்பில் பெருந்தொகை பணம், தங்கத்துடன் இளம் யுவதி கைது
கொழும்பு ராகம பகுதியில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் மாகாணம் - வடக்கு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபாய் பணம், 4 மில்லியன் மதிப்புள்ள தங்கம், 2 மின்னணு தராசுகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
கைது செய்யப்பட்ட பெண் களனி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேல் மாகாணம் - வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri