”நாட்டை முடியுமானவர்களிடம் கையளியுங்கள்” - அரசாங்கத்திடம் விடுக்கப்படும் கோரிக்கை! (Video)
நாட்டின் நிர்வாகத்தை நடத்திச்செல்ல முடியாது என்றால் அதனை ஏற்றுக்கொண்டு, முடியுமானவர்களிடம் கையளிக்கவேண்டும் என்று நடப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைவிடுத்து தொடர்ந்தும் பொதுமக்களை அதாள பாதாளத்துக்கு இழுத்துச்செல்லவேண்டாம் என்று சமூக மற்றும் சமாதான கேந்திர நிலையத்தின் தலைவர் அருட்தந்தை பணிப்பாளர் ரொஹான் சில்வா கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கோரிக்கை விடுத்தார்.
நாடு ஒன்றின் தலைவர் என்பவர், மற்றவர்களின் சார்பில் செயற்படவேண்டியவர்.
எனினும் அதனை மறந்து செயற்படுவது சிறந்ததல்ல. தலைவர் என்பவர் தம்மை தெரிவு செய்தவர்களுக்கு உண்மையானவராக இருக்கவேண்டும்.
அவர் சேவையை எடுப்பதற்கு அல்ல. சேவையை வழங்கவேண்டும்.
அவர் உண்மையானவராக இருக்கவேண்டும்.
அவர் தம்மை பற்றிய அல்லது பரம்பரை பற்றிய எண்ணங்களை விட பொதுமக்கள் தொடர்பில் எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டும்.
மற்றவர்கள் கூறுவதை கேட்கும் திறன் இருக்கவேண்டும்.
தாம் பதவியில் இருப்பது பொதுமக்களின் பொறுப்பாளி என்ற அடிப்படையில் மாத்திரமே செயற்படவேண்டும்.
தலைவர் என்பவர் பொய் சொல்லக்கூடாது. எது நடந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதனை விடுத்து மற்றவரால் நடந்தது என்று கூறி, தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது.
எதற்கும் கோவிட் தொற்றை காரணமாக வைத்துக்கொண்டு பதில் வழங்கும் செயற்பாட்டை நாட்டில் தலைமை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இந்தநிலையில் சில தலைவர்கள் பரம்பரைக்கு சொத்துக்களை சோ்க்கும் முகமாக தாம் இறக்கும் வரை பதவியில் உள்ளவர்களும் உள்ளனர் என்றும் அருட்தந்தை குறிப்பிட்டார்.
இதேவேளை பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் திருப்தி இருக்குமானால், ஏன் வீடுகளில் சீசீடிவி பொருத்தவேண்டும் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் கேட்கப்படுவதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டார்.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 13 மணி நேரம் முன்

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

வெளிநாடு ஒன்றில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை! ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக தகவல் News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri
