மட்டக்களப்பில் பொலிஸாருக்கு நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய சுகாதார பணிமனை ஊடாக பல்வேறு கோவிட் தடுப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் முதற்கட்டமாக அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நேற்று(16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நான்காம் கட்ட பூஸ்டர் (பைசர்) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
குறித்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார
வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி இளையதம்பி உதயகுமார் தலைமையிலான சுகாதாரப்
பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
