வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து வவுனியாவின் பல்வேறு இடங்ளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுளள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலை
அந்தவகையில், திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞரிடம் இருந்து 30 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும், லக்சபானா வீதி, கத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்நத இளைஞா ஒருவரிடம் இருநிது 20 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுதது குறித்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri