ஹட்டனில் போதைப்பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளுக்கிடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,கொழும்பில் தொழில் புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு வந்த போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட, பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
