டெங்கு காய்ச்சலால் நான்கு வயது குழந்தை உயிரிழப்பு
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
வெல்லம்பிட்டிய - வென்னவத்தை பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய பிஹான்சா சதேவ்மினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பிஹன்சா நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம்
டெங்கு நோயின் உச்சக்கட்டமாக கருதப்படும் டெங்கு அதிர்ச்சியே குழந்தையின் மரணத்திற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை சட்ட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன பெரேரா நேற்று (03.07.2023) மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
