தெற்கில் வெவ்வேறு விபத்துக்களில் நால்வர் பரிதாபச் சாவு:எழுவர் படுகாயம்
தெற்கில் மூன்று இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர் எனவும், எழுவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியில் நேற்றிரவு(25.01.2023) இரண்டு கயஸ் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
எழுவர் படுகாயம்
இதன்போது கயஸ் வாகனம் ஒன்றின் சாரதியான 35 வயதுடைய குடும்பஸ்தரும், அதில் பயணித்த சாரதியின் சகோதரனான 27 வயதுடைய இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மற்றைய கயஸ் வாகனத்தின் சாரதியும், அதில் பயணித்த 9 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பெண்களும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையில் நேற்று மாலை முச்சக்கரவண்டியும் பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதியான 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பட்டா வாகனத்தின் சாரதியும், அதில் பயணித்த 7 வயது சிறுவனும் (சாரதியின் மகன்) படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை
பாணந்துறையில் இன்று(26.01.2023) அதிகாலை காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது காரின் சாரதியான 67 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த சாரதியின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனியார் பேருந்தில் சென்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தனியார் பேருந்தின் சாரதி
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri