கனடாவில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்
கனடாவில் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்கள் எதிர்கொள்கின்றனர்.
கியூபெக் மாகாணத்தில் வீடொன்றில் தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்களும் எதிர்கொள்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் பின்கோர்ட் (Pincourt) பகுதியை சேர்ந்த 35 வயதான சுகிர்தன் சிவனேசன், இல் பிசார்ட் (Île Bizard) பகுதியை சேர்ந்த மகிந்தன் சிவலிங்கம், மொன்ரியல் பகுதியை சேர்ந்த 40 வயதான ஜெசிந்தன் சிவலிங்கம், பியர்பொண்ட்ஸ் (Pierrefonds) பகுதியை சேர்ந்த 43 வயதான ஜூலியன் அன்ரி தெரன்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் கைது
அண்மையில் Dollard-des-Ormeaux பகுதியிலுள்ள ஒரே வீட்டில் சமீபத்திய வாரங்களில் நிகழ்ந்த தொடர்ச்சியான குற்றங்களை தொடர்ந்து இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.